Monday, December 13, 2010

தொலைந்து போன காதலி




http://4.bp.blogspot.com/_uk5nd-1QvGw/SUCThXK0RZI/AAAAAAAACDQ/q8kTjc4LPcw/s320/Man_walking_alone.jpg

அவளின் புன் சிரிப்பு வறட்டு புன்னகையாக மாறியுள்ளது

காதல் மொழி பேசிய கண்களில் பயமும் கள்வமும் குடியேறி இருந்தது

அடித்து பேசும் பழக்கம் மாறி இரண்டடி தள்ளி நின்று பேசும் பழக்கம் வந்துள்ளது

நொடிகளுடன் போட்டியிட்டு வெளி வரும் வார்த்தைகள் நிமிடத்திற்கு ஒன்றாக உதிர்ந்தது

உதிரும் வார்த்தைகளில் முன்பிருந்த அக்கறையும், உரிமையும் இல்லை

இவள் இல்லை அவள் என்றது மனது அவளை தவற விடகூடாது என்று எண்ணி வேகமாக நடந்தேன்

காலத்தின் பின்னோக்கி

Wednesday, October 20, 2010

கவிதை


என்னவள்



கடைக்கண் பார்வையில் கவிதை பிறந்தது

முழு பார்வையில் காதல் பிறந்தது

உன் குரல் ஓசையில் குயிலின் குருவை கண்டேன்

உன் மொழியில் தமிழின் தாய் மொழி கண்டேன்

உன் கையசைவில் தென்றல் உருவாகிறது

துள்ளி நடக்கையில் புதிய நாட்டிய கலை

ஆய கலைகள் அனைத்திற்கும் இளவரசி நீயா???


பிறப்பு

ஒவொரு நொடியும் புதியவளாக தெரிகிறாய்

உன்னருகில் நான் பிறகின்றேனா?

என்னருகில் நீ பிறகின்றயா?

நமக்குள் காதல் பிறகின்றதா ??






Friday, October 1, 2010

பார்வை

http://open.salon.com/files/sad_teenage_boy1259940397.jpeg


பார்வை

ஏன் அப்படி பார்த்தான் அவன். அவன் பார்வையின் அர்த்தம் என்ன. அந்த ரெண்டாயிரம் பேர் நிறைந்திருக்கும் அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அவன் ஒருவனின் அந்த ஒரு விநாடி பார்வை அவளை பலவாறு சிந்திக்க வைத்தது.

முன்று வருடம் இருக்கும் இப்பொழுதுதான் பார்க்கிறாள் மறுபடியும் அவனை. அவன் பார்வையின் அர்த்தம் என்ன என்று சிந்தித்து கொண்டு இருக்கும்போது அவள் கணவனின் குரல் அவளை கலைத்தது போகலாமா என்று. அவள் ம் என்று தலையசைத்து இரண்டு பிள்ளைகளையும் அழைத்து கொண்டு காரில் ஏறினால்.
செல்லும் வழியில் அவள் கணவன் ஏன் ஒருமாதிரி இருக்கிறாய் என்று கேட்டதற்கு ஒன்றுமில்லை சிறிது தலைவலி என்று சமாளித்தாள். விட்டிருக்கு வந்து அனைவரயும் துங்க வைத்த பிறகு தூக்கமில்லாமல் தவித்தாள். அவன் பார்வையின் அர்த்தம் என்ன என்று மறுபடியும் யோசனையில் அழ்ந்தால்.

ஒருநேரத்தில் அவனின் ஒவொரு அசைவையும் படித்தவள் இன்று அந்த ஒரு விநாடி பார்வையின் அர்த்தம் தெரியாமல் தவித்தாள். நீண்ட நாள் பிரிந்து ஒரு நாள் சந்தித்தபொழுது அவன் பார்வையில் தெரிந்த ஏக்கத்தை அறிந்தாள். விட்டில் தந்தையுடன் ஏற்பட்ட மோதலை சொல்ல வரும்பொழுது பார்வையில் தெரிந்த சோகம்.
உறவினர்களுக்கு மத்தியில் அவர்கள் அறிய வண்ணம் என்னை சீண்டி சிரிந்த அந்த குறும்பு பார்வை. யாருமற்ற தனிமையில் அவனின் அந்த பார்வை. என்னிடம் காதலை சொல்ல வரும்பொழுது அவன் கண்ணில் தெரிந்த காதல் என அவன் பார்வையை வைத்து அவனின் ஒவொரு அசைவையும் நடவடிக்கையும் கனித்தவள் இன்று அவனின் அந்த ஒரு நொடி பார்வைக்கு அர்த்தம் தெரியாமல் சிந்தித்து கொண்டே உறங்கினாள்.


போதும் அந்த ஒரு நொடி பார்வை போதும் அவளை என் மன கண்ணில் புகைப்படம் போல் பத்திய வைத்துக்கொண்டேன். என் வாழ்வை வாழ்ந்த திருப்தி அந்த ஒரு வினாடியில் கிடைத்தது என்று எண்ணிக்கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறினான் அவன். அவன் நடை வேகமாக இருந்தது நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டே நடந்தான். மூன்று வருடத்திற்கு பிறகு இன்றுதான் பார்த்தேன் அவளை. முன்பைவிட சற்று எடை அதிகரித்து காணபட்டாள். முகத்தில் அதே புன்னகை இன்னமும் தவழ்கிறது அவளிடம். வாழ்நாள் முழுவதும் அந்த முகத்தை பார்த்து வாழ வேண்டும் என் எண்ணியவன் இன்று அந்த ஒரு நொடி அவளின் முகம் போதும் என்று எண்ணி வேகமாக நடந்தான்.

மூன்று வருடமாக அவளை தேடி தேடி அவன் வாழ்வில் தொலைந்து போனது அவன் முகத்தில் தெரிந்தது. அவள் முகத்தை பார்த்ததும் இனம் புரியாத உற்சாகத்துடன் அந்த ஆள் அரவமற்ற ரயிலடி ஓரம் நடந்து சென்றான். தூரத்தில் ஒரு ரயில் 100 கி.மீ வேகத்தில் வந்து கொண்டிருந்தது. வேகமாக தண்டவாளத்தில் ஏறிய அவன் இரண்டு கைகளையும் விரித்து அந்த வண்டியை நேர் எதிரில் வரேவேற்றன். 100 கி.மீ வேகத்தில் வந்த வண்டியும் அவனும் சந்தித்த வேளையில்.

திடுகென்று விழித்தால் அவள் அவன் பார்த்த பார்வையின் அர்த்தம் என்ன என்று மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்தாள்.



Monday, September 20, 2010

ஒரு வரி கவிதை பாகம் 3




காலமெல்லாம் காத்திருந்தும் வரவில்லை நீயும் உன் காதலும்

இனி என் வாழ்வில் இல்லை அம்மாவாசை நீ அருகில் இருப்பதால்

ஒரு வார்த்தையில் ஒரு கவிதை காதல்

எனக்கு கல்லறை கட்ட உன் கல் நெஞ்சை கொடு பெண்ணே

கல்லறையிலும் இன்பமாக இருப்பேன் உன் நினைவு போதும்

ஊர் பேசும் நம் காதலை உள்ளத்தில் வைத்துகொள்ளதே(கொல்லாதே)

உன்னை மறக்க நினைத்து நினைத்து நினைத்து நினைத்து நினைத்து, என்னை மறந்தேன்

மரணத்தை வெல்ல வேண்டும் உன் காதலை கொடு எனக்கு

கம்பல் கூட கவிதை பேசுகிறது நீ தலை அசைகையில்

உன்னை எனக்கு காட்டிய கண்களுக்கு நீ கொடுக்கும் தண்டனை கண்ணீர்




Tuesday, September 7, 2010

ஒரு வரி கவிதை பாகம் 2


சொர்க்கத்தில் இடம் வேண்டாம் உன் பார்வை மட்டும் போதும.

மருந்தில்லாத நோய்க்கு புன்னகையால் மருத்துவம் செய்பவள் நீ.

நான் தினம் பார்க்கும் பௌர்ணமி உன் முகம்.

காத்திருக்கும் வரை தெரியாத கால்வலி நீ வர மாட்டாய் என்றதும் தெரிகிறது.

காலம் முழுவதும் கவலை இல்லாமல் இருக்க விருப்பம் இல்லை காதலிப்போம் வா பெண்ணே.

என் மனமென்னும் வெள்ளை காகிதத்தில் சிரிப்பால் கவிதை எழுத்து முறைப்பால் கிறுக்கிவிடாதே.

Tuesday, August 31, 2010

சில வரிகள்

வெட்ட வெளியில் தனி மரமாய் நின்றேன்
சூரியனை வந்து வெளிச்சம் கொடுத்தை
இரவில் நினைவு எனும் நிலவாக வந்தாய்
பாசம் எனும் மேகத்துடன் வந்து அன்பு எனும் மழை பொழிந்தாய்
இன்று ஆயிரமாயிரம் சொந்தங்கள் உன்னை நானறிவேன் என்னை
நீ அறிவாயா ??

ஒவொரு மனிதனின் வாழ்விலும் ஒரு சோக கதை உண்டு
உன் சோக கதையின் தலைப்பை ஒருவரிடம் சொல்
அவர்களுடைய கதையின் முற்றும் வரை உன்னிடம் சொல்வார்கள்.

Tuesday, August 17, 2010

ஒரு வரி கவிதைகள் பாகம் 1


என்னவளின் இதழை தெரியாமல் கடித்த எறும்பு இறந்து விட்டது சர்க்கரை நோய் வந்து.

அடித்து விட்டு செல் பெண்ணே காதல் பார்வையில் கொன்றுவிட்டு போகதே.

தரிசனம் கிடைத்த மகிழ்ச்சி இருவருக்கும் கோவில் புசாரியாய் நான் பக்தையாய் அவள்.

சிறிய நெற்றியில் ஒற்றை பொட்டை ஓட்டிவிட்டு நல்லாயிருக்கா என்று கேட்கிறாய் எதை சொல்ல அந்த முகத்தில்.

ஒரு பார்வை பார்த்துவிட்டு செல் பெண்ணே உடனடியாக ஒரு கவிதை வேண்டும் எனக்கு.

காற்றில் மிதக்கும் உன் ஒற்றை முடியை ஒதுக்குவது போல் காதலில் மிதக்கும் என் இதயத்தை ஒதுக்காதே.

காதல் உன்னை ஆனந்தபடுத்தும்
காதலி உன்னை அழவைப்பாள்.



Thursday, July 22, 2010

என்ன தவறு செய்தோம் நங்கள்?


என்ன தவறு செய்தோம் நங்கள்
ஏன் எங்களை வதைகின்றிர்கள்
நன்றாக விளையாடினோம் ஆகையால்
லட்சம் லட்சமாக பெற்றோம்
உலகின் தலை சிறந்த அணி என்ற பெயர் பெற்றோம் ஆகையால்
கோடி கோடியாய் சம்பாதித்தோம்
விளம்பரங்கள் கோடி கோடியாய் கொண்டு வந்து
கொட்டி கொடுத்தன வீடு வந்து கொடுப்பதை
வேண்டாம் என்பாய நீ?

ஒரு நடிகை கூறினால் அவர்கள் செல்கிறார்கள்
பக்கத்துக்கு நாட்டிற்கு நான் ஏன் செல்ல கூடாது என்று
நங்கள் என்ன எங்கள் வேலைகா செல்கிறோம்
நாட்டிற்காக விளையாட செல்கிறோம்.
எங்களுக்கு மட்டும் ஆபத்து இல்லையா
விளையாட்டு அரங்கின் வாசலில் வைத்து
தீவிரவாதிகள் சுட பார்கிறார்கள்.

என்ன தவறு செய்தோம் நங்கள்?

Wednesday, July 7, 2010

மௌனத்தின் வலி


உன்னை சந்தித்த பிறகு ஒரு நிமிடம் கூட நான் தனிமையில் இருந்ததில்லை. உன்னுடன் சிலநாள் உன் நினைவுடன் வாழ்நாள் முழுவதும் இருக்கிறேன்.

ஏன் மௌனமாக இருகின்றாய் என்னிடம் எனக்காக இந்த உலகில் எதை வேண்டுமானாலும் விடுவதற்கு தயாராக இருப்பதாக கூறினாய். இன்று உன் மௌனத்தை மட்டும் விட்டுவிட மறுகின்றாய். என் உயிரே தனிமை வதைகின்றது. இந்த உலகம் என்னை மட்டும் விட்டுவிட்டு சுழலுகின்றது. உன்னை விட்டுபிரிந்த அந்த கடைசி நாளன்று இன்னும் நான் நின்று கொண்டிருக்கிறேன். விரைவில் வந்து என் கைகோர்த்து இந்த உலகிற்கு என்னை அறிமுகபடுத்திவை.

உன்னை தேடி தேடி இந்த உலகில் என் ஆன்மா தொலைந்துவிட்டது. உன் நினைவை சில நிமிடம் விட்டுவிட்டு இருப்பதற்கு நான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டது. கடவுள் கூட அதற்கு துணை நிற்கவில்லை.

நம்முடைய காதல் ஒருபொழுதும் தோற்பதில்லை நம்முடைய காதல் மீது நமக்கு நம்பிக்கை இருக்கும்வரை. என் காதல் இன்று வரை தோற்கவில்லை. எனக்கு என்னைவிட என் மீது நீ கொண்ட காதல் மீது உள்ள நம்பிக்கையால்.





Friday, June 18, 2010

என் காதலி



என் வாழ்வில் முதன்முதலாக வரும் அவளை தேடினேன். நீண்ட நாள் தேடினேன் கடைசியாக அவளை கண்டேன். கண்டவுடன் காதல் கொண்டேன். நான் என்னவள் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைபடனோ அதற்கு சிறிதும் மாறாமல் அவள் இருந்தாள். மெதுவாக அவளிடம் சென்று என் விருப்பதை கூறினேன். சற்று நேர யோசனைக்குபின் சரி என்றாள். என் வாழ்வின் உச்சகட்ட இன்பத்தை அடைந்தேன். வானில் பறப்பது உணர்ந்தேன். கை கோர்த்து நடந்தோம். அனைத்து இடம்களிலும் சுற்றினோம். ஊர் ஊரக திரிந்தோம். உலகின் அனைத்து இடம்களிலும் எங்களுடைய தடம் பதிக்க ஆசைப்பட்டோம். பார்த்தவர்கள் அனைவரும் மிக சரியான இணை என்று கூறினார்கள். என் நண்பர்கள் நல்ல துணை தேர்ந்தெடுத்தாய் என்று கூறி பாரட்டினார்கள்.

சந்தோசமாக திரிந்த ஒருநாள் திடிரென்று இதற்கு மேல் என்னால் வர இயலாது என்று மக்கர் பண்ணினாள். உன் விருப்பதை இப்போதே நிறைவேற்றுகிறேன் என்று கூறி அதில் சிலவற்றை நிறைவேற்றினேன். ஆனால் அவள் ஒத்துழைக்கவில்லை. சற்று கோவம் சோகத்துடன் விடு திரும்பினேன்.

அந்த நிகழ்வை மறந்துவிட்டு மறுபடியும் சந்தோசமாக சுற்றினோம். முக்கியமான நிகழ்சிக்கு செல்ல வேண்டும் தயாராக இருக்குமாறு கூறினேன். மறுநாள் கிளம்பும்போது என்னால் வர இயலாது என்றாள். ஏன் என்ற கேள்விக்கு பதிலில்லை. மிகவும் சிரமப்பட்டு அவளுக்கு சில பணிவிடைகள் செய்தேன். வர இயலாது என்று உறுதியாக கூறிவிட்டாள். வேறு ஒருவருடன் செல்ல விரும்பவில்லை ஆகையால் நிகழ்ச்சியை தவற விடேன்.

தொடர்ந்து தொல்லை கொடுத்தாள். ஆனால் அவளிடம் கோபம் கொள்ளவில்லை. அவளுடைய நடத்தை பற்றி நண்பர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் நீங்கள் முன்பு புதியவர்களா இருந்ததால் அதீதா அன்பு காரணமாக சிலவற்றை அறியவில்லை அவளுக்காக நீ செலவு செய்ய வேண்டும் அப்பொழுதுதான் உன் வாழ்கையை அவள் மகிழ்ச்சியாக வைதுகொள்வாள் என்று கூறினார்கள். நான் அதற்கு சம்மதித்தேன்.

முன்புபோல் மறுபடியும் சுற்றினோம்,துள்ளி திரிந்தோம். அவள் கேட்கும்போதெல்லாம் அவளுக்காக செலவு செய்தேன். கேட்கும்போதெல்லாம் எண்ணாமல் அள்ளி அள்ளி கொடுத்தேன். மேலும் மேலும் தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்தாள் என்னால் இயலவில்லை. மெதுவாக அவளிடம் கூறினேன். நான் உன்னை மிகவும் விரும்புகிறேன் ஆனால் என்னால் இதற்கு மேல் செலவு செய்ய முடியவில்லை என்று கூறினேன். அதற்கு அவள் பதில் சொல்லவில்லை. செய்த செலவிற்காக சில நாள் என்னுடன் திரிந்தாள்.

ஒருநாள் இதற்கு மேல் உன்னுடன் பழக முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டாள். அவள் மீது சிறிதும் கோபபடாமல் மனது நிறைய வருத்ததுடன் அமைதியாக இருந்தேன். தினமும் அவளை பார்த்து ரசித்தேன். நான் பார்க்கும்போதெல்லாம் அமைதியாக இருப்பாள். ஒரு மாதத்திற்கு மேல் அவளை பார்த்து பார்த்து ரசித்தேன் ஆனால் பழகவில்லை. அவளின் மௌனம் மிகவும் வலித்தது எனக்கு. நான்தான் இன்பமாக இருக்கவில்லை என்னால் அவள் ஏன் துன்பப்பட வேண்டுமென கனத்த இதயத்துடன் ஒரு முடிவு செய்தேன்
அவளை பிரிந்து விடலாமென்று.


பல நாள் துன்பத்திற்கு பிறகு வீட்டில் எனக்காக புதியவளை தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் வார்த்தைக்கு மறுப்பு சொல்லாமல் ஏட்றுகொண்டேன். புதியவள் பொருத்தமாக இருந்தாள். உதவிகரமாகவும்,சிக்கனமாகவும்,மனதுக்கு பிடித்தபடியும் நடந்து கொண்டாள். அவள் மீது எனக்கு அக்கறை இருந்தது ஆனால் ஆசையும் காதலும் எழவில்லை. நண்பர்கள் இதுதான் வாழ்கை இப்படித்தான் இருக்கும் என அறுதல் கூறினார்கள்.

அவளை மறக்க இயலாமல் மனம் துடிதுகொண்டிருகிறது. எங்கேயாவது சாலையில் அவள் குரல் கேட்டால் மனம் அலைபாய்ந்து கண்கள் நீயாக இருக்கவேண்டுமென தேடும். உன்னை போல் ஒருவளை பார்த்தல் சிறிது நேரம் நின்று ரசித்து கொண்டிருக்கிறேன். என்றாவது ஒருநாள் உன்னை காண்பேன் என்ற ஆசையுடன் ஒரு விநாடிகூட இமை மூடாது காத்திருக்கிறேன்.

இப்படிக்கு
உன்னை மறவா காதலன்

குறிப்பு: அவள் பெயரை சொல்ல மறந்துவிட்டேன் அவள் பெயர் yamaha (பைக்)
அவளை வாழ்நாள் முழுவதும் மறவாமல் இருக்கவேண்டுமென என் மின் அஞ்சல் முகவரியில் அவளை இணைத்தேன். யாராவது அவளை கண்டால் சொல்லுங்கள் இறப்தற்கு முன் உன்னை ஒருமுறையாவது காண வேண்டுமென ஒருவன் காத்திருக்கிறான் என்று.

Sunday, May 30, 2010

என்னை விட்டு இறந்து(மறந்து) போன காதலிக்கு

என் உயிர் நீ என்று கூறினாய்.
அதனாலதான் என் உயிரை கையேடு எடுத்து சென்றுவிட்டாயா?

என்னை விட்டு பிரிந்து விடாதிர்கள் என்றாய்.
என் அருகாமை உனக்கு நெருப்பாக இருக்கிறது என்று விலகி சென்றுவிட்டாயா?

என்னுள் நீ இருக்கிறாய் என்றாய்.
நீ வேண்டாம் உன் நினைவுகள் மட்டும் போதும் என்று விலகி விட்டாயா?

உங்களை தவிர உலகில் வேறு எதுவும் முக்கியம் இல்லை என்றாய்.
நான் சொன்ன வார்த்தைகளை தவிர மற்றவர்கள் கூறியதை மற்றவர்கள் கூறியதை முக்கியமாக எடுத்துக்கொண்டு பிரிந்து விட்டாயே.

நீ ஒருவன் போதும் என் வாழ்கை முழுவதற்கும் என்றாய்.
இன்றோ என் ஒருவனை தவிர மற்ற அனைவரிடமும் உறவாடுகின்றாய்.

என் இன்பமே உன் வாழ்வின் லட்சியம் என்றாய்
உன் லட்சியத்தை நிறைவேற்றிவிட்டு எனக்கு துன்பத்தை வாழ்நாள் பரிசாக அளித்துவிட்டாய்.

Friday, May 28, 2010

உன் அருகாமை

மனிதனின் மனம் அதீக
இன்பத்திலும் துன்பத்திலும்
மரணத்தை விரும்பும்
உன் அருகில் நான் இருக்கும்பொழுது
மரணத்தை விரும்புகிறேன்.

Thursday, May 20, 2010

திருமண(மரண) கயிறு









கண்ணோடு கண் பார்க்கும்பொழுது
உன்னை மட்டுமே பார்க்கும்படி
கட்டிபோட்டாய்


உன்னுடன் பேசும்பொழுது
வேறு யாருடனும் பேச கூடாது என
என் வார்த்தையின் ஒவ்வொரு வரிகளையும்
கட்டிபோட்டாய்

நீ பேசும்பொழுது உன்னுடைய பேச்சு ஒலியை தவிர
உலகில் சத்தமே எல்லையென எனது செவிகளை
கட்டிபோட்டாய்

உன் பதிலுகாக காத்திருக்கிறேன்
இப்பொழுது எந்த கயிறு
தர போகின்றாய் நான் கட்டுவதற்கு


தாலிகயிறா?? மரண கயிறா ???