Friday, October 1, 2010

பார்வை

http://open.salon.com/files/sad_teenage_boy1259940397.jpeg


பார்வை

ஏன் அப்படி பார்த்தான் அவன். அவன் பார்வையின் அர்த்தம் என்ன. அந்த ரெண்டாயிரம் பேர் நிறைந்திருக்கும் அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அவன் ஒருவனின் அந்த ஒரு விநாடி பார்வை அவளை பலவாறு சிந்திக்க வைத்தது.

முன்று வருடம் இருக்கும் இப்பொழுதுதான் பார்க்கிறாள் மறுபடியும் அவனை. அவன் பார்வையின் அர்த்தம் என்ன என்று சிந்தித்து கொண்டு இருக்கும்போது அவள் கணவனின் குரல் அவளை கலைத்தது போகலாமா என்று. அவள் ம் என்று தலையசைத்து இரண்டு பிள்ளைகளையும் அழைத்து கொண்டு காரில் ஏறினால்.
செல்லும் வழியில் அவள் கணவன் ஏன் ஒருமாதிரி இருக்கிறாய் என்று கேட்டதற்கு ஒன்றுமில்லை சிறிது தலைவலி என்று சமாளித்தாள். விட்டிருக்கு வந்து அனைவரயும் துங்க வைத்த பிறகு தூக்கமில்லாமல் தவித்தாள். அவன் பார்வையின் அர்த்தம் என்ன என்று மறுபடியும் யோசனையில் அழ்ந்தால்.

ஒருநேரத்தில் அவனின் ஒவொரு அசைவையும் படித்தவள் இன்று அந்த ஒரு விநாடி பார்வையின் அர்த்தம் தெரியாமல் தவித்தாள். நீண்ட நாள் பிரிந்து ஒரு நாள் சந்தித்தபொழுது அவன் பார்வையில் தெரிந்த ஏக்கத்தை அறிந்தாள். விட்டில் தந்தையுடன் ஏற்பட்ட மோதலை சொல்ல வரும்பொழுது பார்வையில் தெரிந்த சோகம்.
உறவினர்களுக்கு மத்தியில் அவர்கள் அறிய வண்ணம் என்னை சீண்டி சிரிந்த அந்த குறும்பு பார்வை. யாருமற்ற தனிமையில் அவனின் அந்த பார்வை. என்னிடம் காதலை சொல்ல வரும்பொழுது அவன் கண்ணில் தெரிந்த காதல் என அவன் பார்வையை வைத்து அவனின் ஒவொரு அசைவையும் நடவடிக்கையும் கனித்தவள் இன்று அவனின் அந்த ஒரு நொடி பார்வைக்கு அர்த்தம் தெரியாமல் சிந்தித்து கொண்டே உறங்கினாள்.


போதும் அந்த ஒரு நொடி பார்வை போதும் அவளை என் மன கண்ணில் புகைப்படம் போல் பத்திய வைத்துக்கொண்டேன். என் வாழ்வை வாழ்ந்த திருப்தி அந்த ஒரு வினாடியில் கிடைத்தது என்று எண்ணிக்கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறினான் அவன். அவன் நடை வேகமாக இருந்தது நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டே நடந்தான். மூன்று வருடத்திற்கு பிறகு இன்றுதான் பார்த்தேன் அவளை. முன்பைவிட சற்று எடை அதிகரித்து காணபட்டாள். முகத்தில் அதே புன்னகை இன்னமும் தவழ்கிறது அவளிடம். வாழ்நாள் முழுவதும் அந்த முகத்தை பார்த்து வாழ வேண்டும் என் எண்ணியவன் இன்று அந்த ஒரு நொடி அவளின் முகம் போதும் என்று எண்ணி வேகமாக நடந்தான்.

மூன்று வருடமாக அவளை தேடி தேடி அவன் வாழ்வில் தொலைந்து போனது அவன் முகத்தில் தெரிந்தது. அவள் முகத்தை பார்த்ததும் இனம் புரியாத உற்சாகத்துடன் அந்த ஆள் அரவமற்ற ரயிலடி ஓரம் நடந்து சென்றான். தூரத்தில் ஒரு ரயில் 100 கி.மீ வேகத்தில் வந்து கொண்டிருந்தது. வேகமாக தண்டவாளத்தில் ஏறிய அவன் இரண்டு கைகளையும் விரித்து அந்த வண்டியை நேர் எதிரில் வரேவேற்றன். 100 கி.மீ வேகத்தில் வந்த வண்டியும் அவனும் சந்தித்த வேளையில்.

திடுகென்று விழித்தால் அவள் அவன் பார்த்த பார்வையின் அர்த்தம் என்ன என்று மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்தாள்.



No comments:

Post a Comment