Saturday, January 5, 2013

பூ



ஒற்றை காலில் தவமிருக்கும் அழகி

அழகு ஆபத்து என்னும் கூற்றை பொய்யாக்கிய அழகி

அழகிகளை அழகால் மயக்கும் அழகி

அழகால் அழகுக்கு அழகு கூட்டும் அழகி

பல வண்ணத்தை ஆடையக்கிய அழகி

வாசத்தால் அனைவரையும் வசமாகும் அழகி

காதலுக்கு தூது  செல்லும் அழகி

குறைந்த விலையில் விலையில்லா அன்பை பெற்று தரும் அழகி

கல்லறையில் மதிப்பையும் கருவறையில் மரியாதையையும் பெறும்  அழகி


Tuesday, February 8, 2011

உன் பிரிவு

http://www.fringu.com/wpwallpapers/20100602pB9JtXv1.jpg

நாட்கள் நகர்கிறது
காலம் மாறவில்லை

நம் பாதையில் பூசெரிந்த மரங்கள்
வேலை நிறுத்தம் செய்கிறது

நாம் கை கோர்த்து நடந்த தடம்
ஒரு வழி பாதையாக மாறியுள்ளது

கரை தொடும் அலைகள்
காலை தழுவ மறுக்கிறது

உனக்கு மலர் தந்த செடியும்
மொட்டை விரிக்க மறுக்கிறது

விரல்களுக்கிடையே இருந்த உறவு எங்கே என்று
என் விரல்களும் வினா எழுப்புகிறது

முகம் பார்க்கும் கண்ணாடி
உன் முகத்தை பிரதிபலிகிறது

தனிமையில் உன் குரலின்
எதிரொலி என் காதில்

என்னிடம் இல்லைதான் என் இதயம்
இரும்பாய் கனக்கிறது

நெஞ்சுக்குள் இருக்கும் உன் நினைவு
நெஞ்சை கிழித்து வெளியே செல்ல துடிக்கிறது

கண்ணுக்குள் இருக்கும் உன் பிம்பத்தால்
கண்ணீரும் இனிக்கிறது

மரணம் கூட மறுக்கிறது
இவன் மரித்துவிட்டவன் என்று

Thursday, January 6, 2011

வளரும் காதல்

http://www.umnet.com/pic/diy/theme/Homescreen%5C12927cf7-aa12.gif

காதலை சொன்ன பிறகும்
கட்டியணைக்காத உன் கண்ணியத்தில்
வளர்கிறது என் காதல்

கண்ணை மட்டும் பார்த்து
கதை பேசும் உன் கட்டுப்பாட்டில்
வளர்கிறது என் காதல்

விரல் மட்டும் கோர்த்து
நடக்கும் உன் நாகரிகத்தில்
வளர்கிறது என் காதல்

என் வெட்கத்தை மட்டும் ரசிக்கும்
உன் கண்ணில்
வளர்கிறது என் காதல்

என் உணர்வை மட்டும்
ரசித்து எழுதிய உன் கவிதையில்
வகர்கிறது என் காதல்

தாமரை இலையில் ஒட்டாத
தண்ணிர் போல்
காமத்தில் ஒட்டாத உன் காதலில்
வளருதடா என் காதல்.






Monday, December 13, 2010

தொலைந்து போன காதலி




http://4.bp.blogspot.com/_uk5nd-1QvGw/SUCThXK0RZI/AAAAAAAACDQ/q8kTjc4LPcw/s320/Man_walking_alone.jpg

அவளின் புன் சிரிப்பு வறட்டு புன்னகையாக மாறியுள்ளது

காதல் மொழி பேசிய கண்களில் பயமும் கள்வமும் குடியேறி இருந்தது

அடித்து பேசும் பழக்கம் மாறி இரண்டடி தள்ளி நின்று பேசும் பழக்கம் வந்துள்ளது

நொடிகளுடன் போட்டியிட்டு வெளி வரும் வார்த்தைகள் நிமிடத்திற்கு ஒன்றாக உதிர்ந்தது

உதிரும் வார்த்தைகளில் முன்பிருந்த அக்கறையும், உரிமையும் இல்லை

இவள் இல்லை அவள் என்றது மனது அவளை தவற விடகூடாது என்று எண்ணி வேகமாக நடந்தேன்

காலத்தின் பின்னோக்கி

Wednesday, October 20, 2010

கவிதை


என்னவள்



கடைக்கண் பார்வையில் கவிதை பிறந்தது

முழு பார்வையில் காதல் பிறந்தது

உன் குரல் ஓசையில் குயிலின் குருவை கண்டேன்

உன் மொழியில் தமிழின் தாய் மொழி கண்டேன்

உன் கையசைவில் தென்றல் உருவாகிறது

துள்ளி நடக்கையில் புதிய நாட்டிய கலை

ஆய கலைகள் அனைத்திற்கும் இளவரசி நீயா???


பிறப்பு

ஒவொரு நொடியும் புதியவளாக தெரிகிறாய்

உன்னருகில் நான் பிறகின்றேனா?

என்னருகில் நீ பிறகின்றயா?

நமக்குள் காதல் பிறகின்றதா ??






Friday, October 1, 2010

பார்வை

http://open.salon.com/files/sad_teenage_boy1259940397.jpeg


பார்வை

ஏன் அப்படி பார்த்தான் அவன். அவன் பார்வையின் அர்த்தம் என்ன. அந்த ரெண்டாயிரம் பேர் நிறைந்திருக்கும் அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அவன் ஒருவனின் அந்த ஒரு விநாடி பார்வை அவளை பலவாறு சிந்திக்க வைத்தது.

முன்று வருடம் இருக்கும் இப்பொழுதுதான் பார்க்கிறாள் மறுபடியும் அவனை. அவன் பார்வையின் அர்த்தம் என்ன என்று சிந்தித்து கொண்டு இருக்கும்போது அவள் கணவனின் குரல் அவளை கலைத்தது போகலாமா என்று. அவள் ம் என்று தலையசைத்து இரண்டு பிள்ளைகளையும் அழைத்து கொண்டு காரில் ஏறினால்.
செல்லும் வழியில் அவள் கணவன் ஏன் ஒருமாதிரி இருக்கிறாய் என்று கேட்டதற்கு ஒன்றுமில்லை சிறிது தலைவலி என்று சமாளித்தாள். விட்டிருக்கு வந்து அனைவரயும் துங்க வைத்த பிறகு தூக்கமில்லாமல் தவித்தாள். அவன் பார்வையின் அர்த்தம் என்ன என்று மறுபடியும் யோசனையில் அழ்ந்தால்.

ஒருநேரத்தில் அவனின் ஒவொரு அசைவையும் படித்தவள் இன்று அந்த ஒரு விநாடி பார்வையின் அர்த்தம் தெரியாமல் தவித்தாள். நீண்ட நாள் பிரிந்து ஒரு நாள் சந்தித்தபொழுது அவன் பார்வையில் தெரிந்த ஏக்கத்தை அறிந்தாள். விட்டில் தந்தையுடன் ஏற்பட்ட மோதலை சொல்ல வரும்பொழுது பார்வையில் தெரிந்த சோகம்.
உறவினர்களுக்கு மத்தியில் அவர்கள் அறிய வண்ணம் என்னை சீண்டி சிரிந்த அந்த குறும்பு பார்வை. யாருமற்ற தனிமையில் அவனின் அந்த பார்வை. என்னிடம் காதலை சொல்ல வரும்பொழுது அவன் கண்ணில் தெரிந்த காதல் என அவன் பார்வையை வைத்து அவனின் ஒவொரு அசைவையும் நடவடிக்கையும் கனித்தவள் இன்று அவனின் அந்த ஒரு நொடி பார்வைக்கு அர்த்தம் தெரியாமல் சிந்தித்து கொண்டே உறங்கினாள்.


போதும் அந்த ஒரு நொடி பார்வை போதும் அவளை என் மன கண்ணில் புகைப்படம் போல் பத்திய வைத்துக்கொண்டேன். என் வாழ்வை வாழ்ந்த திருப்தி அந்த ஒரு வினாடியில் கிடைத்தது என்று எண்ணிக்கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறினான் அவன். அவன் நடை வேகமாக இருந்தது நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டே நடந்தான். மூன்று வருடத்திற்கு பிறகு இன்றுதான் பார்த்தேன் அவளை. முன்பைவிட சற்று எடை அதிகரித்து காணபட்டாள். முகத்தில் அதே புன்னகை இன்னமும் தவழ்கிறது அவளிடம். வாழ்நாள் முழுவதும் அந்த முகத்தை பார்த்து வாழ வேண்டும் என் எண்ணியவன் இன்று அந்த ஒரு நொடி அவளின் முகம் போதும் என்று எண்ணி வேகமாக நடந்தான்.

மூன்று வருடமாக அவளை தேடி தேடி அவன் வாழ்வில் தொலைந்து போனது அவன் முகத்தில் தெரிந்தது. அவள் முகத்தை பார்த்ததும் இனம் புரியாத உற்சாகத்துடன் அந்த ஆள் அரவமற்ற ரயிலடி ஓரம் நடந்து சென்றான். தூரத்தில் ஒரு ரயில் 100 கி.மீ வேகத்தில் வந்து கொண்டிருந்தது. வேகமாக தண்டவாளத்தில் ஏறிய அவன் இரண்டு கைகளையும் விரித்து அந்த வண்டியை நேர் எதிரில் வரேவேற்றன். 100 கி.மீ வேகத்தில் வந்த வண்டியும் அவனும் சந்தித்த வேளையில்.

திடுகென்று விழித்தால் அவள் அவன் பார்த்த பார்வையின் அர்த்தம் என்ன என்று மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்தாள்.