நாட்கள் நகர்கிறது
காலம் மாறவில்லை
நம் பாதையில் பூசெரிந்த மரங்கள்
வேலை நிறுத்தம் செய்கிறது
நாம் கை கோர்த்து நடந்த தடம்
ஒரு வழி பாதையாக மாறியுள்ளது
கரை தொடும் அலைகள்
காலை தழுவ மறுக்கிறது
உனக்கு மலர் தந்த செடியும்
மொட்டை விரிக்க மறுக்கிறது
விரல்களுக்கிடையே இருந்த உறவு எங்கே என்று
என் விரல்களும் வினா எழுப்புகிறது
முகம் பார்க்கும் கண்ணாடி
உன் முகத்தை பிரதிபலிகிறது
தனிமையில் உன் குரலின்
எதிரொலி என் காதில்
என்னிடம் இல்லைதான் என் இதயம்
இரும்பாய் கனக்கிறது
நெஞ்சுக்குள் இருக்கும் உன் நினைவு
நெஞ்சை கிழித்து வெளியே செல்ல துடிக்கிறது
கண்ணுக்குள் இருக்கும் உன் பிம்பத்தால்
கண்ணீரும் இனிக்கிறது
மரணம் கூட மறுக்கிறது
இவன் மரித்துவிட்டவன் என்று

excellcent
ReplyDeleteஅருமையான கவிதை..
ReplyDeleteவாழ்த்துக்கள்