
என்னவளின் இதழை தெரியாமல் கடித்த எறும்பு இறந்து விட்டது சர்க்கரை நோய் வந்து.
அடித்து விட்டு செல் பெண்ணே காதல் பார்வையில் கொன்றுவிட்டு போகதே.
தரிசனம் கிடைத்த மகிழ்ச்சி இருவருக்கும் கோவில் புசாரியாய் நான் பக்தையாய் அவள்.
சிறிய நெற்றியில் ஒற்றை பொட்டை ஓட்டிவிட்டு நல்லாயிருக்கா என்று கேட்கிறாய் எதை சொல்ல அந்த முகத்தில்.
ஒரு பார்வை பார்த்துவிட்டு செல் பெண்ணே உடனடியாக ஒரு கவிதை வேண்டும் எனக்கு.
காற்றில் மிதக்கும் உன் ஒற்றை முடியை ஒதுக்குவது போல் காதலில் மிதக்கும் என் இதயத்தை ஒதுக்காதே.
காதல் உன்னை ஆனந்தபடுத்தும்
காதலி உன்னை அழவைப்பாள்.

அருமையான கவிதை வாழ்த்துகள் பல
ReplyDeleteஇன்னும் தொடருங்கள்