
உன்னை சந்தித்த பிறகு ஒரு நிமிடம் கூட நான் தனிமையில் இருந்ததில்லை. உன்னுடன் சிலநாள் உன் நினைவுடன் வாழ்நாள் முழுவதும் இருக்கிறேன்.
ஏன் மௌனமாக இருகின்றாய் என்னிடம் எனக்காக இந்த உலகில் எதை வேண்டுமானாலும் விடுவதற்கு தயாராக இருப்பதாக கூறினாய். இன்று உன் மௌனத்தை மட்டும் விட்டுவிட மறுகின்றாய். என் உயிரே தனிமை வதைகின்றது. இந்த உலகம் என்னை மட்டும் விட்டுவிட்டு சுழலுகின்றது. உன்னை விட்டுபிரிந்த அந்த கடைசி நாளன்று இன்னும் நான் நின்று கொண்டிருக்கிறேன். விரைவில் வந்து என் கைகோர்த்து இந்த உலகிற்கு என்னை அறிமுகபடுத்திவை.
உன்னை தேடி தேடி இந்த உலகில் என் ஆன்மா தொலைந்துவிட்டது. உன் நினைவை சில நிமிடம் விட்டுவிட்டு இருப்பதற்கு நான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டது. கடவுள் கூட அதற்கு துணை நிற்கவில்லை.
நம்முடைய காதல் ஒருபொழுதும் தோற்பதில்லை நம்முடைய காதல் மீது நமக்கு நம்பிக்கை இருக்கும்வரை. என் காதல் இன்று வரை தோற்கவில்லை. எனக்கு என்னைவிட என் மீது நீ கொண்ட காதல் மீது உள்ள நம்பிக்கையால்.

Manathil Ulla valikalin varththai vativam ....
ReplyDeletegood fain
ReplyDelete