


கண்ணோடு கண் பார்க்கும்பொழுது
உன்னை மட்டுமே பார்க்கும்படி
கட்டிபோட்டாய்
உன்னுடன் பேசும்பொழுது
வேறு யாருடனும் பேச கூடாது என
என் வார்த்தையின் ஒவ்வொரு வரிகளையும்
கட்டிபோட்டாய்
நீ பேசும்பொழுது உன்னுடைய பேச்சு ஒலியை தவிர
உலகில் சத்தமே எல்லையென எனது செவிகளை
கட்டிபோட்டாய்
உன் பதிலுகாக காத்திருக்கிறேன்
இப்பொழுது எந்த கயிறு
தர போகின்றாய் நான் கட்டுவதற்கு
தாலிகயிறா?? மரண கயிறா ???

No comments:
Post a Comment